`சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்'- ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக போலீஸ் சீராய்வு மனு

`சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்'- ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக போலீஸ் சீராய்வு மனு

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 50 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அக்டோபர் 2-ம் தேதி சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்தப்போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்திருந்தார். அக்டோபர் 2-ம் தேதி வேறு சில அமைப்புகளும் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடத்த அனுமதி கோரியதால் சட்டம், ஒழுங்கு கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "தற்போதைய சட்டம் - ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in