
’’தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருவதால் சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது’’ என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக கே.எஸ்.அழகிரி கும்பகோணம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’ மோடி ஆட்சியில் அதானி வளர்ந்திருக்கிறார். ஆனால் நாடு வீழ்ந்து கிடக்கிறது. அதானி குறித்து சர்வதேச நாடுகள் கூட இதனைக் கண்டித்தும் மோடி வாய் திறக்காமல் இருக்கிறார்.
அதிமுகவை பாஜகதான் இயக்குகிறது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெறும். இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஒன்றரை வருட திமுக ஆட்சிக்கு சான்றிதழ் வழங்கும் தேர்தலாக அமையும். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது அதனால் சட்ட ஒழுங்கும் சிறப்பாக உள்ளது’’ என அவர் கூறினார்.