தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். அதற்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக இருக்கிறது.
கொலை,கொள்ளை, போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கிறது என்பதற்கு சாட்சி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் மட்டுமே.
காவல்நிலையத்தில் 2,3 நாட்களுக்கு முன்பு நடந்த திமுகவினரின் சம்பவங்களையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. சட்டம் ஒழுங்கை அரசு பாதுகாக்க வேண்டும். அதற்கு முதல் உரிமை கொடுக்க வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.