நவம்பர் 1... மொழிவழி மாநிலங்கள் உருவான தினம்!

காமராஜர், மாபொசி
காமராஜர், மாபொசி

மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு இன்றுடன் 67 ஆண்டுகளாகும் நிலையில், அதனை கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களும் 2 யூனியன் பிரதேசங்களும் மொழிவாரி நாளாக இன்று கடைப்பிடிக்கின்றன.

சுதந்திரத்திற்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தென் மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தமிழகத்திலும் அதற்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று 58 நாட்கள் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். ஸ்ரீராமுலுவின் மரணத்தால் வெகுண்டெழுந்த தெலுங்கு பேசும் மக்கள் வன்முறைப் போராட்டங்களில் இறங்கினர். இந்தப் போராட்டத்தால் மெட்ராஸ் மாகாணமே கலவர பூமியானது.

இதன் விளைவாக 1956 நவம்பர் 1-ம் தேதி இந்தியாவில் 14 மொழி வாரி மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் பிரிக்கப்பட்டது. அவ்வாறு பிரிக்கப்பட்டு இன்றுடன் 67 ஆண்டுகளாகின்றன. மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பிரிந்த தினத்தை ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இன்று (நவ.1) மாநில நாளாக கொண்டாடுகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in