மாணவர்களின் தாழ்வு மனப்பான்மைக்கு இதுதான் காரணம்: தீர்வுக்கு வழிசொல்லும் முதல்வர் ஸ்டாலின்

மாணவர்களின் தாழ்வு மனப்பான்மைக்கு இதுதான் காரணம்: தீர்வுக்கு வழிசொல்லும் முதல்வர் ஸ்டாலின்

தமிழ் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நம்முடைய இளைஞர்கள் மொழித்திறனை பெற்றிருக்க வேண்டும். நல்ல மொழி ஆற்றல் இருந்தால்தான் நமக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். இன்றைய பணி சூழலில் ஆங்கிலப் பேச்சாற்றல் என்பது தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'நான் முதல்வன்' திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக கல்லூரி முதல்வர்களுக்கான கருத்தரங்ககை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,“ நான் முதல்வன் இணைய தளத்தை மாணவர்கள் பயன்படுத்தும் போது, தெளிவான சீரான தகவல்களை அவர்கள் பெற முடியும். இந்த இணைய தளத்தில் உள்ள திறனறிவு தேர்வு மூலம் மாணவர்களின் உளவியல் பண்புகளை ஆராய்ந்து அதற்கேற்ப பயிற்சிகளை பரிந்துரைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையதளத்தின் வாயிலாக கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப அந்த பாடங்களைக் கூடுதலாக பயின்றால் நவீன தொழில் நிறுவனங்களில் வேலைகளை எளிதாகப் பெறமுடியும். மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களைத் தேர்வு செய்து படிக்க கூடுதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய புதிய படிப்புகள் ஏராளமாக வந்துவிட்டன. அந்த படிப்புகளை நீங்கள் கற்க வேண்டும். கல்லூரியில் படிக்கும் போதே தனித்திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் கூடுதல் ஆண்டுகள் செலவிட்டால்தான் வேலை வாய்ப்பை பெறக் கூடிய பாடங்களைப் படிக்க முடியும். ஆனால், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இத்தகைய பாடத்திட்டங்களைக் கல்லூரி படிக்கும் போதே வழங்க இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நம்முடைய இளைஞர்கள் மொழித்திறனை பெற்றிருக்க வேண்டும்.

நல்ல மொழி ஆற்றல் இருந்தால்தான் நமக்கு வளர்ச்சி இருக்கும். இன்றைய பணி சூழலில் ஆங்கிலப் பேச்சாற்றல் என்பது தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது. ஆங்கிலத் திறன் குறைவாக இருப்பது மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்களில் பணிக்கு சேர்வதை கைவிட்டு விடுகிறார்கள். தமிழ், ஆங்கில நாளேடுகளையும், புத்தகங்களையும் வாசித்துப் பழகுங்கள்.” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in