லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

ராப்ரி தேவி, லாலு பிரசாத் யாதவ்
ராப்ரி தேவி, லாலு பிரசாத் யாதவ்லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

ரயில்வே வேலைக்காக நிலத்தை ஈடாகப் பெற்ற வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

2004 மற்றும் 2009 காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, லாலுவின் குடும்பத்தினர் வேலைவாய்ப்புக்காக நிலங்களை பரிசாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், லாலு பிரசாத் யாதவ், அவரின் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி மற்றும் அவர்களது மகளான ஆர்ஜேடி எம்பி மிசா பார்தி ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக இவர்கள் மூவரிடமும் சிபிஐ சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது.

சிபிஐயின் குற்றச்சாட்டின்படி, லாலு அமைச்சராக இருந்த நேரத்தில் நிலங்களுக்கு ஈடாக எட்டு பேருக்கு ரயில்வேயில் குரூப் டி வேலை வழங்கப்பட்டது. லாலுவும் அவரது குடும்பத்தினரும் ரயில்வே வேலைக்காக 1 லட்சம் சதுர அடி நிலத்தை வெறும் ரூ.26 லட்சத்துக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது, அப்போது அந்த நிலத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.4.39 கோடியாக இருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in