
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனது தந்தை லாலுபிரசாத் பலமுறை போட்டியிட்ட தொகுதியில் தான் போட்டியிட தயாராக உள்ளதாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தேஜ்பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். பீகாரின் அசைக்க முடியாத அரசியல் தலைவரான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை சென்றபின் அவரது கட்சிக்கான செல்வாக்கு கொஞ்சம் குறைந்து ஆட்சியையும் பறிகொடுத்தது. தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி அரசில் ராஷ்டிரீய ஜனதா தளமும் பங்கேற்றுள்ளது. லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் தேஜ்பிரதாப், சாரன் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் பேசுகையில், "எதிர்வரும் 2024 லோக்சபா தேர்தலில், மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தால் தனது தந்தை லாலு பிரசாத் போட்டியிட்ட சாப்ரா தொகுதியில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எந்த தலைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2013ல் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவி நீக்கம் செய்யப்படும் வரை லாலு அந்த தொகுதியின் எம்பி ஆக இருந்திருக்கிறார். தற்போது அந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாக தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார். பீகாரை பொறுத்தவரை ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் தொகுதிகளை ஒதுக்குவதில் அக்கட்சிகளுக்குள் சிக்கல் நேரிடும் என்ற நிலையில் மாநில அமைச்சராக உள்ள தேஜ் பிரதாப்பும் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!