‘சேராத கட்சியிலிருந்து எப்படி விலகுவேன்?’: லட்சுமி ராமகிருஷ்ணன் லகலக..!

‘சேராத கட்சியிலிருந்து எப்படி விலகுவேன்?’: லட்சுமி ராமகிருஷ்ணன் லகலக..!

பாஜகவிலிருந்து விலகியதாக தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு கோபமும், நகைச்சுவையுமாக பதில் தந்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

நடப்பு தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க பெண் கலைஞர்களில் முக்கியமானவர் லட்சுமி ராமகிருஷணன். நடிப்பு முதல் இயக்கம் வரை பல்வேறு பரிணாமங்கள் கொண்ட இவர் சாமானியர்களின் அந்தரங்க விவகாரங்களை நாட்டாமை செய்யும் டிவி நிகழ்ச்சிகளின் வாயிலாக அதிகம் பிரபலமானவர். சமூக அக்கறையுள்ள கருத்துக்களை அவ்வப்போது பொதுவெளியில் பகிர்ந்து பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் பெற்றவர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்தான செய்தி ஒன்று இன்று காலை முதல் பரபரப்பை கிளப்பி வருகிறது. பல்வேறு ஆன்லைன் மற்றும் காட்சி ஊடகங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது. மேலும் தொலைக்காட்சி ஒன்றில் கிடுக்கிப்பிடி கேள்விகளால் பிரபலங்களை தெறிக்கவிடும் நெறியாளர் ஒருவரும், லட்சுமி ராமகிருஷ்ணனுடனா பேட்டி தொடர்பாக இதே விவகாரத்தை தனது சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

‘காய்த்ரி ரகுராமைத் தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனும் பாஜகவில் இருந்து விலகுகிறார்’ என்பதுதான் இந்த செய்திகளின் சாராம்சம். இதனிடையே லட்சுமி ராமகிருஷ்ணனின் அரசியல் பிரவேசம் மற்றும் விலகல் தொடர்பான முரண்பாடான கருத்துக்கள் பொதுவெளியில் அதிகம் பரவியதால், அவரே முன்வந்து விளக்கம் தந்துள்ளார். அதில் தன்னிலை விளக்கத்தோடு பத்திரிக்கையாளர்களையும் ஒரு பிடி பிடித்திருக்கிறார்.

”நான் பாஜகவில் சேர்ந்ததே இல்லை எனும்போது, எப்படி அக்கட்சியிலிருந்து வெளியேற இயலும்” என்று விளக்கம் தந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ”தவறாக சுட்டுவதும், சிதைப்பதுதான் இன்றைய ஊடகத்தின் தரமாக நிலவுகிறது. ’சற்று ஒழுங்கை வளர்த்துக்கொள்ளாதவரை, பத்திரிக்கையாளர்களுக்கு மற்றவர்களை கேள்வி கேட்கும் தகுதி இல்லை’ என்று அண்ணாமலை குறிப்பிட்டது சரிதான்!” என்று ஊடவியலாளர்களை சாடி உள்ளார். ’பாஜகவிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகல்’ என்ற களேபரத்தை கிளப்பிய குறிப்பிட்ட தொலைக்காட்சி நெறியாளரையும் இந்த பதிவு சேருமாறு இணைத்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in