மகளிர் உரிமைத்தொகை; கோலமிட்டு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பெண்கள்!

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோலம்
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோலம்
Updated on
2 min read

மகளிர் உரிமைத்தொகை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவையில் பெண்கள் மற்றும் திமுக ஆண் நிர்வாகிகள் வீட்டின் முன் கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுக சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப பெண்களுக்கு 1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருந்தது. அதன்படி சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் செப்டம்பரில் பெண்களுக்கான உரிமை தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து அதற்கான பணிகளை துவங்கியது. மேலும் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு பெண்களிடம் விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது. இதற்காக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதில் ஒரு கோடியே 54 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இதில் 1 கோடியே 6 லட்சம் குடும்ப பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான உரிமை தொகை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோலம்
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோலம்

அதன்படி பெண்கள் உரிமை தொகை இன்று முதல் வழங்கப்பட உள்ள நிலையில் சோதனை அடிப்படையில் குடும்ப பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் நேற்று முதல் வர துவங்கியது. இதையடுத்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஆங்காங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள காமராஜர் வீதியில் கோலங்கள் போடப்பட்டு அதில் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என எழுதி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து தற்போது அதனை செயல்படுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மாதம் ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை இல்லாவிட்டாலும், எங்களுக்கு அவசர காலத்தில் அது பயன்படும். குடும்பச் செலவுகளை கவனிக்கவும், மருத்துவம் தொடர்பான திடீர் செலவுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என தெரிவித்தனர்.

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோலம்
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கோலம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in