மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றார் எல்.முருகன்!

எல்.முருகன்
எல்.முருகன்

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் பாஜக மாநில தலைவராக பதவி வகித்து வந்தார். தமிழிசை சௌந்தரராஜனுக்கு பிறகு தலைவரான அவர் பாஜகவை சுறுசுறுப்புடன் இயங்க வைத்தார். தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை நடத்தி பாஜகவை கவனம்பெற வைத்தார். அதன் பயனாக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பிறகு எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

பிரதமருக்கு மிகவும் நெருக்கமான எல்.முருகனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதனால் மீண்டும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்வானார். முந்தைய பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, இன்று மாநிலங்களவை உறுப்பினராக அவர் மீண்டும் பதவி ஏற்று கொண்டுள்ளார்.

அவருடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேலும் 12 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், அதன்பிறகு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்பதாக கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in