தேர்தல் அலுவலர்கள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகின்றனர்... எல்.முருகன் புகார்!

எல்.முருகன்
எல்.முருகன்

நீலகிரி தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுவதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர், கடந்த இரண்டு நாட்களாக மேட்டுப்பாளையம், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் முடிந்து இன்று ஊட்டிக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் ஆ.ராசாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரசாரத்திற்கு ஆ.ராசா செல்லும்போது, கிராமத்திற்குள் வர வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வெளியே அனுப்புகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நீலகிரி தொகுதியை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆ.ராசா கடவுள்களைப் பற்றி தவறாக பேசுகிறார். அவர் ஒரு பிரிவினைவாதி. 2009ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிடும் ஆ. ராசா அவருடைய வாக்காளர் அடையாள அட்டையை கூட இதுவரை நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை.

நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம்
நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் தீவிர பிரச்சாரம்

சமூக நீதி பற்றி பேச ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோருக்கு தகுதி கிடையாது. தனித் தொகுதிகளில் போட்டியிட எந்த அருந்ததியினருக்கும் திமுக வாய்ப்பு தரவில்லை. நீலகிரி தொகுதியில் தேர்தல் அலுவலர்கள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல் செயல்படுகின்றனர்.

எனவே தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், சுந்தரமாகவும் ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க., சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் என்னை சுற்றி வருகின்றனர். ஆனால் ஆ.ராசா செல்லும் வாகனத்தை அவர்கள் முறையாக சோதனை செய்வதுகூட கிடையாது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in