
'தமில் வாழ்க! தமில் மொழி வாழ்க!' என பிழையாக எழுதி பிரதமர் மோடியை புகழ்ந்திருக்கும் குஷ்புவின் ட்வீட்டை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நேற்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி வாரணாசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதனைப் பாராட்டி நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ இன்று தமிழ் உலகம் முழுவதும் அறியப்படுகிறது. தமிழனுக்கு மரியாதை மற்றும் அதன் கலாச்சாரம் இரட்டிப்பாக வளர்ந்துள்ளது. ஏனெனில் நீங்கள் அதை உலகளவில் எடுத்துச் சென்றுள்ளீர்கள். உங்களைப் பின்பற்றுபவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் குடிமகனாகவும் நாங்கள் எப்போதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருப்போம்” என தெரிவித்துள்ளார். மேலும், அந்த ட்வீட்டில், “மிக்க நன்றி! தமில் வாழ்க! தமில் மொழி வாழ்க!” என தமிழில் பிழையாக எழுதியுள்ளார்.
குஷ்பு தமிழில் பிழையாக எழுதியதைப் பகிர்ந்து நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ‘தமிழ் வாழ்க. Sorry for typo error. மனிக்கவும்’ என குஷ்பு ட்வீட் செய்துள்ளார். மன்னிப்பு கேட்ட ட்வீட்டிலும், ‘மனிக்கவும்’ என பிழையாக அவர் எழுதியதால், இந்த ட்வீட்டையும் நெட்டிசன்கள்பங்கம் செய்து வருகிறார்கள்.