மாதம் ரூ.1000 நிதி உதவித்தொகை நிறுத்தமா? குஷ்பு சொன்ன அதிர்ச்சி தகவல்!

மகளிர் உரிமை திட்ட அட்டை
மகளிர் உரிமை திட்ட அட்டை

திமுக அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை, பாதி பேருக்கு நிறுத்த திட்டமிட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற போது திமுக முன்வைத்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். ஆட்சிக்கு வந்த சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னர், கடந்த செப்டம்பர் 19ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ஒரு கோடி பேருக்கு இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்திருந்தார். இதற்கு மகளிரிடையே பெரும் வரவேற்பு இருந்து வந்தாலும், குளறுபடிகளால் பலருக்கும் கிடைக்காத காரணத்தினால் அதிருப்தியும் இருந்து வருகிறது.

திட்டத்தை துவக்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (கோப்பு படம்)
திட்டத்தை துவக்கி வைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (கோப்பு படம்)

இதனிடையே இந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் பலருக்கும் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுவதில்லை எனவும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இத்திட்டத்தின் மூலம் பலனடைந்து வரும் பாதி பேருக்கு, ஆயிரம் ரூபாய் பணம் வழங்கும் திட்டத்தை நிறுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

முதலில் அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் என கூறிவிட்டு, பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு என்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். வீடு வீடாக ஆய்வு செய்ய போவதாக தற்போது செல்வதாகவும், இவை அனைத்துமே பாதி பேருக்கு கொடுக்காமல் இருப்பதற்கான திட்டம் தான் எனவும் அவர் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in