தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸுடன் கூட்டணி தேவையா? - திமுகவுக்கு குஷ்பு கேள்வி!

குஷ்பு
குஷ்பு
Updated on
1 min read

மணிப்பூருக்கு நீலிக்கண்ணீர் வடித்தது போதும். காவிரியில் தண்ணீர் தரமறுக்கும் இந்தியா கூட்டணி தமிழகத்துக்கு தேவையா? என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

குஷ்பு
குஷ்பு

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியிருப்பதாவது, காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் விடாததால் டெல்டா பகுதியில் பயிர்கள் கருகி கிடக்கின்றன. தி.மு.க. அரசு தண்ணீர் கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறதாம். இப்படியே எத்தனை நாள் தான் மக்களை ஏமாற்றுவீர்கள்?

கர்நாடகத்தில் உங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி தானே நடக்கிறது. அவர்களிடம் பேசி தண்ணீர் பெற முடியாத நிலையில் தானே தி.மு.க. உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் தராத கட்சியை ஏன் தலை மீதும், தோள் மீதும் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். தமிழகத்தை பா.ஜனதா வஞ்சிப்பதாக கூறும் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவாரா?

பாரதிய ஜனதா கட்சி மதவாத அரசியல் செய்வதாக விமர்சிக்கும் தி.மு.க. சாதி மோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்கிறது. நாடு முழுவதும் பெண்களை பாதுகாப்பதற்கான கடுமையான சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

இந்நிலையில் மணிப்பூருக்கு நீலிக்கண்ணீர் வடிப்பதை நிறுத்திவிட்டு காய்ந்து கிடக்கும் பயிர்களுக்கு காவிரி தண்ணீரை பெற்று தரும் பணிகளில் திமுக இறங்கட்டும்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in