குஷ்புவின் நடனத்தால் குஷியான தொண்டர்கள்... களைகட்டிய பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: கலக்கல் வீடியோ

குஷ்புவின் நடனத்தால் குஷியான தொண்டர்கள்... களைகட்டிய பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: கலக்கல் வீடியோ

தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாள் தொடக்க விழாவில் குஷ்பு நடனமாடி தொண்டர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழுக்கூட்டம் ஹைதராபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. ஹைதராபாத் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 19 மாநில முதல்வர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். மிகப் பெரிய அளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்குத் தலைவர்களை வரவேற்கும் விதமாக ஹைதராபாத் நகரம் முழுவதும் பாஜக கொடிகள் மற்றும் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் வகையில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.

தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பாஜக இரண்டு நாள் செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று பாஜக தேசிய செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள். நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு, தொண்டர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடினார். கூட்டத்திற்கு வந்தவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் குஷ்புவின் கோலாட்டம் களைகட்டியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in