குடும்ப ஆட்சியை மட்டுமே திமுக நம்புகிறது... நடிகை குஷ்பு ஆவேசம்!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு

குடும்ப ஆட்சியை மட்டுமே நம்புவது திமுக என்பதை மகளிர் மாநாட்டிலும் நிரூபித்து விட்டதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக உறுப்பினருமான குஷ்பு விமர்சித்துள்ளார்.

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக மகளிர் அணி சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முக்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாடு
திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாடு

இதனிடையே இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சித்துள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக உறுப்பினருமான குஷ்பு, திமுக மகளிர் மாநாடு, வாரிசு அரசியலின் உச்சம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பெண் தலைவர்களுக்கும், அரசியலில் குடும்ப பாரம்பரியம் இருப்பதாக அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இணைய குடும்ப அரசியலின்றி தானாக முன்னேறிய பெண்கள் யாரும் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in