‘சந்திரசேகர் ராவின் மகன் கேடிஆர் போதைக்கு அடிமையானவர்’ - பாஜக தலைவர் பரபரப்பு

‘சந்திரசேகர் ராவின் மகன் கேடிஆர் போதைக்கு அடிமையானவர்’ - பாஜக தலைவர் பரபரப்பு

தெலங்கானா ராஷ்டிர சமிதியின் செயல் தலைவரும், மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான கே.டி.ராமராவ் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெலங்கானா பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பண்டி சஞ்சய் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரஜா சங்க்ராம யாத்திரையின் ஒரு பகுதியாக நிர்மல் மாவட்டத்தில் உள்ள மம்தா மண்டல் திம்மாதுர்த்தி கிராமத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் பண்டி சஞ்சய் குமார், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகனான கே.டி.ஆர்., தனக்கு புகையிலை மெலும் பழக்கம் இருப்பதாகக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு கடுமையாக பதிலளித்தார்.

இது தொடர்பாகப் பேசிய பண்டி சஞ்சய் குமார், "நான் புகையிலையை மெல்லுகிறேன் என்று கேடிஆர் கூறுகிறார். இது அப்பட்டமான பொய். உண்மையில் போதைக்கு அடிமையானவர் கே.டி.ஆர். நான் புகையிலைக்கு அடிமை இல்லை என்பதை நிரூபிக்க எனது இரத்த மாதிரிகள் உட்பட எனது உடலின் எந்த பாகத்தையும் பரிசோதனைக்கு வழங்க தயாராக இருக்கிறேன். கேடிஆர் போதைப்பொருள் சாப்பிடவில்லை என்பதை நிரூபிக்க, இரத்தம் மற்றும் முடி மாதிரிகளை பரிசோதனைக்கு கொடுக்க அவருக்கு தைரியம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in