பிடிஆர், செந்தில் பாலாஜியை விமர்சித்து கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ட்விட்!

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

வெளிப்படையான காரணம் ஏதும் சொல்லப்படாமல் கடந்த ஒரு மாதம் முன்பாக, திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். திமுகவுக்குள்ளேயே இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மூத்த அமைச்சர்கள் சிலர் ராதாகிருஷ்ணனை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள தலைமையிடம் வலியுறுத்தியதாகச் சொல்லப்பட்டது. இதனால், தனது நீக்கம் குறித்து வெளிப்படையாக எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் ராதாகிருஷ்ணன்.

இந்த நிலையில், நீக்கப்பட்டு ஒரு மாதம் கழிந்த பிறகும் திமுக தலைமை தனது முடிவை மறுபரிசீலனை செய்யாததால் சற்று முன்னர் ட்விட்டரில் தனது ரியாக்‌ஷனைக் காட்டி இருக்கிறார் ராதாகிருஷ்ணன்.

தனது நீக்கம் தொடர்பாக சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள ராதாகிருஷ்ணன், ‘எந்த உழைப்பும் இல்லாத தியாகராஜன்கள், நேற்றுவரை திட்டித் தீர்க்கப்பட்ட செந்தில் பாலாஜிகள் என பலர் படிகளே இல்லாத ஏணியின் வழியே உச்சத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள் என்கிறபோது, எங்களைப் போன்ற உழைப்பைக் கொடுத்த சுயமரியாதைக்காரர்கள் உகந்தவர்களாக இல்லாமல் போவதில் ஆச்சரியமில்லை.

விடுதலை ஆகியிருக்கிறோம்... மன அமைதி!

பொதுத்தளத்தில் தொடர்ந்து இயங்குவோம்!’

என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலம் அமைதியாக இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தற்போது அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனையும் செந்தில் பாலாஜியையும் நேரடியாக விமர்சனம் செய்து கருத்துப் பதிவிட்டிருப்பது திமுக தரப்பில் பலராலும் வேகமாகப் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in