`நளினியை விடுதலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை'- கே.எஸ்.அழகிரி இப்படி சொல்ல காரணம் என்ன?

`நளினியை விடுதலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை'- கே.எஸ்.அழகிரி இப்படி சொல்ல காரணம் என்ன?

“நளினியை விடுவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு இல்லை. பெரிய குற்றம் செய்த பேரறிவாளனையே விடுதலை செய்யும் போது, சிறிய குற்றம் செய்த நளினியை விடுதலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த கே.எஸ்.அழகிரி, “அக்னிபத் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு மேலும் கொடுமையான செயலை இந்தியாவின் மீது திணிக்கிறது. நான்கு ஆண்டுகளில் இளைஞர்கள் ராணுவத்தில் இருந்து என்ன செய்ய முடியும். மக்களின் வரிப்பணத்தில் ஆர்எஸ்எஸ் என்ற ஒரு ராணுவப் படையை பாஜக உருவாக்குகிறது. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் வரும் 27-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது சர்வாதிகாரத்துக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம். காங்கிரஸ் கட்சி பொதுத்துறை, தனியார் துறை ஆகிய இரண்டிற்குமே அனுமதி கொடுத்தது. ஆனால் பொதுத்துறையை அழித்து தனியார் துறையை வளர்க்கிறது பாஜக. இதனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இந்தியாவிலும் ஏற்படும்.

அதிமுகவில் உள்ள பிரச்சினைகளுக்குள் நுழைய விரும்பவில்லை. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை நாகரிகமாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் நடைபெற்ற சம்பவங்கள் வருத்தத்திற்குரியது. தமிழகத்தில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். லாக்கப் மரணங்கள் ஏற்படாதவாறு அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோள். நளினியை விடுவிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு இல்லை. பெரிய குற்றம் செய்த பேரறிவாளனையே விடுதலை செய்யும் போது, சிறிய குற்றம் செய்த நளினியை விடுதலை செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in