கே.எஸ்.அழகிரி ஆதரவாளர் பதவி பறிப்பு!: திருவண்ணாமலையில் பரபரப்பு

செங்கம் ஜி.குமார்
செங்கம் ஜி.குமார்கே.எஸ்.அழகிரி ஆதரவாளர் பதவி பறிப்பு!: திருவண்ணாமலையில் பரபரப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் வலது கரமாக செயல்பட்ட செங்கம் ஜி.குமார் வகித்து வந்த திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டவர் செங்கம் ஜி.குமார். காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்ட செங்கம் ஜி.குமார் அவர் வகித்து வந்த மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை பதவியில் இருந்து நீக்கி காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செங்கம் ஜி.குமார் பதவி நீக்கத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படாததால் அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in