`திமுகவோடு காங்கிரஸ் ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை’- கொந்தளிக்கும் கே.எஸ்.அழகிரி!

`திமுகவோடு காங்கிரஸ் ஒத்துப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை’- கொந்தளிக்கும் கே.எஸ்.அழகிரி!

``திமுகவோடு கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் அவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்று அர்த்தமல்ல'' எனக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டியில் அவரது உருவப் படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஏன் விடுதலை செய்யப்பட வில்லை? கோயமுத்தூர் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஏராளமான இஸ்லாமிய இளைஞர்களின் மீது வழக்குகள் கூட பதியப்படாமல் இன்னும் சிறையிலேயே இருக்கிறார்கள். அவர்களை ஏன் விடுதலை செய்யவில்லை?

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?. ஏன் அவர்களுக்குக் குரல் கொடுக்கக் கூடாதா? . அவர்களை அழைத்துப் பேசுங்கள், மீண்டும் அவர்களைத் தேசிய நீரோட்டத்தில் சேருங்கள். அவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுங்கள். அவர்களுக்கும் ஒரு வாழ்க்கையைக் கொடுங்கள்.

திமுகவோடு கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் அவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்று அர்த்தமல்ல. காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவிற்கும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. பொதுவுடைமை கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏராளமான கருத்து வேறுபாடு உண்டு. மதச்சார்பின்மை என்ற ஒரே நேர்க்கோட்டில்தான் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோமே தவிர, எங்கள் கருத்தும் அவர்கள் கருத்தும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in