‘காங்கிரஸை அழிக்க சர்வாதிகாரி போல் ஆகிவிட்டார் மோடி!’ - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

‘காங்கிரஸை அழிக்க சர்வாதிகாரி போல் ஆகிவிட்டார் மோடி!’ - கே.எஸ்.அழகிரி ஆவேசம்

காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் எனும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சர்வாதிகாரியைப் போல் செயல்படுவதாகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னையில் செய்தியாளர்ளை இன்று சந்தித்த கே.எஸ்.அழகிரி, “நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாடுகளில் நடக்கும் பணப்பரிவர்த்தனை தொடர்பாகத்தான் அமலாக்கத் துறை விசாரிக்கும். ஆனால் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ஒரு ரூபாய்கூட பணப் பரிவர்த்தனை நடக்கவில்லை. அனைத்தும் எழுத்துபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டது. இதில் சுப்பிரமணிய சுவாமிதான் குழப்பம் ஏற்படுத்தும்வகையில் தவறான வழக்கைத் தொடர்ந்தார். இதில் ஒரு தவறும் நடக்கவில்லை என்று தெரிந்தும், காங்கிரஸை வீழ்த்த மோடி, அமலாக்கத் துறையை ஏவி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்" என்றார்.

மேலும், “உலக வரலாற்றில் சர்வாதிகாரிகள்தான் இப்படிச் செயல்படுவார்கள். விசாரிக்கச் சொல்வார்கள். கடைசியில் ஒன்றும் இல்லை என்று தெரியவரும். அதனால் நாளை ராகுல் விசாரணைக்காக ஆஜராகும்போது அனைத்து மாநிலங்களிலும் உள்ள அமலாக்கத் துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும். சென்னை சாஸ்திரி பவன் முன்பு எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அமலாக்கத் துறை இதை விசாரிக்காமல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்” என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in