கிருஷ்ணசாமி போடும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கணக்கு!

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

’புதிய தமிழகம்’ கட்சியை டாக்டர் கிருஷ்ணசாமி தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. இதற்காக நவம்பர் 15-ல் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாநாடு நடத்துகிறார் கிருஷ்ணசாமி. அவருக்கு செல்வாக்குமிக்க ஓட்டப்பிடாரம் தொகுதியில்தான் அவரது தேவேந்திர குல வேளாளர் சமூகவாக்குகள் மிக அதிகம். ஆனால் கிருஷ்ணசாமியின் பாஜக பாசம், தேசிய அரசியல் பார்வை ஆகியவை ஓட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமிக்கு ஜெயம் கொடுக்கவில்லை. இதனால் அங்கிருந்து நகர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியைக் குறிவைக்கிறாராம் டாக்டர்.

அதற்கான முன்னோட்டமாகவே கட்சி மாநாட்டை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏற்பாடு செய்கிறாராம். தொகுதிக்குள் இருக்கும் பட்டியல் சமூகத்து வாக்குகளைத் தாண்டி, இந்துத்துவ அரசியல் முன்னெடுப்பால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மனதிலும் இடம்பிடித்திருக்கிறார் கிருஷ்ணசாமி. ஜீயரின் ஆசியோடு தொடங்கப்பட்டுள்ள ’இந்து சமத்துவ சமூகநீதி கூட்டமைப்பு’ என்ற அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணசாமி, இதையெல்லாம் வைத்து ஓட்டப்பிடாரத்தில் விட்டதை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிடிக்கலாம் என கணக்குப் போடுகிறாராம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in