‘சுயசிந்தனை இல்லாதவர் ஓபிஎஸ்; அவரை விமர்சிக்கக் கூட வெட்கப்படுகிறோம்’ - கே.பி.முனுசாமி காட்டம்!

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

அதிமுகவில் ஓபிஎஸ் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அவரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம் எனவும் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ”ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர். ஜெயலலிதா மறைவிற்குப் பின், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எந்தவித சூழ்நிலையிலும் இந்த கட்சியில் சேர்த்துவிடக் கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களைச் சேர்க்க விடமாட்டேன். இதே போல் டி.டி.வி..தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்று கூறிய அவர் பல்வேறு கால கட்டங்களில் தன்நிலையை மாற்றிப் பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இருந்துள்ளார்.

ஓர் இயக்கத்தில் கடுமையாகப் போராடி, பல சோதனைகளைச் சந்தித்து, பல அவமானங்களைச் சந்தித்து, அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்புள்ளது. ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர் ஓபிஎஸ். சுய சிந்தனை இல்லாதவர் இப்படி தான் பேசுவார். அவருக்கு சுயமாகச் சிந்திக்கத் தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காகக் கட்சியையும், கட்சித் தலைமையையும் பயன்படுத்தி உள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்கக் கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in