‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..’ -கே.பி.முனுசாமி ஆடியோ விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி ரவுசு!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி கே.பி.முனுசாமி ஆடியோ விவகாரம்; அரசியலில் இதெல்லாம் சகஜம் - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பளீர்

கே.பி.முனுசாமி ஆடியோ குறித்தான கேள்விக்கு, ’அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று தனது பாணியில் பதிலை தந்திருக்கிறார், அதிமுக முன்னாள் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி.

நாமக்கலில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாவது, ‘’திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி, கட்டுமானம் உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக தான் உள்ளனர். இது மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும்” என்றார்.

மேலும், கே.பி.முனுசாமி ஆடியோ குறித்த கேள்விக்கு, ”அரசியலில் கொடுங்கல் வாங்கல் சகஜம். இதையெல்லாம் ஆடியோவாக வெளியிடுவது அரசியல் நாகரீகம் கிடையாது. அந்த ஆடியோவில் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ சீட்டு வாங்கி தருவதாக ஒரு இடத்தில் கூட கூறவில்லை. அந்த ஆடியோ உண்மையாக இருக்கலாம்; அதில் இருக்கும் கருத்துக்கள் உண்மை இல்லை'’ என்று தனது பாணியில் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in