அப்படி என்ன சொன்னார் கே.பி.முனுசாமி: இப்படி வறுத்தெடுக்கிறார் கோவை செல்வராஜ்

அப்படி என்ன சொன்னார் கே.பி.முனுசாமி: இப்படி வறுத்தெடுக்கிறார் கோவை செல்வராஜ்

ஈபிஎஸ் ஆதரவாளர் கே.பி.முனுசாமியை வறுத்தெடுத்துள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.

ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வகையில், ஈபிஎஸ் ஆதரவாளர்களாக ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் குறித்து கடுமையாக விமர்சித்தனர். "பல்வேறு கட்சிகளுக்குத் தாவி, இன்று ஓபிஎஸ்ஸிடம் கைக்கூலியாக இருந்து வருகிறார் கோவை செல்வராஜ். எங்கள் மீது கீழ்த்தரமான விமர்சனங்களை வைப்பதற்கான வாய்ப்பை ஓபிஎஸ் அவருக்குக் கொடுத்துள்ளார். கைக்கூலி கோவை செல்வராஜ் மீது எனக்கு வருத்தம் இல்லை. ஆனால், அதனை ஊக்குவிக்கும் ஓபிஎஸ் மீதுதான் எனக்கு வருத்தம்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார் கே.பி.முனுசாமி. இதற்கு கோவை செல்வராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கே.பி.முனுசாமி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தபோது சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அதிமுகவுக்கு ஏதோ புதிதாக நான் வந்ததுபோலவும், ஒருங்கிணைப்பாளர் சொல்லித்தான் நான் பேசுவதாகவும் ஒரு கருத்தை கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். ஓபிஎஸ் ஒரு நாளும் இவரைப்போன்று, யாரை தற்போது தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கிறாரோ அவரைப் போன்று தவறான கருத்துகளை சொல்லமாட்டார். யாரையும் தூண்டிவிட மாட்டார், யாரையும் பேச சொல்லமாட்டார். நானும் யாரும் சொல்லி பேசுகிற அளவுக்கு முட்டாள் அல்ல. கே.பி.முனுசாமியை போல காசுக்கு கூலியாட்களைப் போல அடிமையாளாக வேலை செய்கிற அரசியல்வாதி நான் அல்ல. 1972-ல் அதிமுகவில் 17 வயது இளைஞனாக இருந்தபோது வேலை செய்தவன் நான். எடப்பாடி பழனிச்சாமி, கே.பி.முனுசாமியை போல எட்டப்பர்கள் அதிமுகவை இப்போது நடத்துகிறார்கள்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி அளவோடு பேச வேண்டும். இல்லையென்றால் உங்களுடைய அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்த தயங்க மாட்டேன். உங்களைப்போன்ற கோமாளி அல்ல நான். அதிமுகவில் அம்மாவை பார்த்து வளர்ந்தவன் நான். புரட்சித் தலைவர் எங்களுக்கு சாப்பாடு போட்டு பணம் கொடுத்தவர். அப்படிப்பட்ட தொண்டன் நான். உங்களைப் போல எம்ஜிஆரால் நீக்கப்பட்டவன் அல்ல. எம்ஜிஆரால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர், அம்மா வந்த பிறகுதான் கட்சிக்குள் வந்தார் என்பதை அவர் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ராஜ்யசபாவில் 4 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவிட்டு, ஐந்தாண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு அதிமுகவில் அமைச்சராக வேண்டும் என்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் முனுசாமி. சட்மன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார். இவரால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி திமுகவுக்கு போயிருக்கிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள், மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். கே.பி.முனுசாமி செய்தது அயோக்கியத்தனம். ஐந்து வருஷத்தை காலிப் பண்ணிட்டு ரோஷம், சூடு, சொரணை இருந்தால் முனுசாமி பேசுவாரா?" என்று காட்டமாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in