தைலாபுரம் தோட்டத்தில் ஐக்கியமான காங்கிரஸ் பிரமுகர்!

தைலாபுரம் தோட்டத்தில் ஐக்கியமான காங்கிரஸ் பிரமுகர்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகியான தேவதாஸ் இன்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்பு அக்கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளரும், தொழிலதிபருமான சேலம் ராமசாமி உடையாரின் மகன் தேவதாஸ். இவரது தந்தை ராமசாமி நீண்ட காலம் காங்கிரஸில் விசுவாசமாகப் பயணித்தவர். தேவதாஸ் நீண்ட காலமாகக் காங்கிரஸிலிருந்தாலும் அவருக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணத்தால், அக்கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

மேலும், 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமாகா சார்பில் சேலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். ஆனால் அவர் கட்சியினரை அரவணைத்து செல்லாததால் அவருக்குச் செல்வாக்கு குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஒருவருடத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். தீவிர அரசியலில் இருந்து விலகிய தேவதாஸ் சிறிது காலம் தொழிலில் ஆர்வம் காட்டிவந்தார். இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை் சந்தித்தார். பாமகவில் இணைந்த தேவதாஸ் அக்கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in