அலுவலகத்தில் புகுந்தது போலீஸ்; அதிமுக ஐடி பிரிவு தலைவர் அதிரடி கைது: காரணம் என்ன?

அலுவலகத்தில் புகுந்தது போலீஸ்; அதிமுக ஐடி பிரிவு தலைவர் அதிரடி கைது: காரணம் என்ன?

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணித் தலைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் மீதும் தனி நபர்கள் மீதும் சமூக வலைதளங்களில் தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பியும், தாக்குதலும் நடத்தி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை கண்காணிக்க தனிக்குழு அமைத்துள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு. இந்தக் குழுவினர் சமூக வலைதளங்களை கண்காணிக்க தொடங்கிவிட்டது. இனி அவதூறு பரப்புபவர்கள் தப்ப முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாகக் கூறி கோவை அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், அன்னூர் அருகே ஓரைக்கால் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (45). இவர் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக உள்ளார். இவர் மீது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியதாக கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிந்தனர். கோவில்பாளையத்தில் அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்ற காவல்துறையினர் சுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in