`நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம்'- விராட் கோலியின் படத்தை தெறிக்கவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

`நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம்'- விராட் கோலியின் படத்தை தெறிக்கவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50வது சதத்தை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கு முன் இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49) சாதனையை சமன் செய்தார்.

மும்பையில் இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கெதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் 106 பந்துகளில் ஒரு சிக்ஸ், 8 பவுண்டரிகளுடன் விராட் கோலி சதமடித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தைக்கண்டு களித்து வரும் சச்சின் தெண்டுல்கர் முன்னிலையில் அவரது சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த சச்சின் சாதனையை விராட் கோலி சற்று முன் முறியடித்தார்.

இந்தநிலையில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50வது சதத்தை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில், "விராட் கோலி ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக் கோப்பை அரையிறுதியில் அபார சாதனைக்கு வாழத்துகள்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in