சூடுபிடிக்கும் கோடநாடு கொலை வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகனிடம் விசாரணை!

சூடுபிடிக்கும் கோடநாடு கொலை வழக்கு: மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகனிடம் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில்குமாரிடம் தனிப்படையினர் இன்று விசாரணை நடத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொள்ளப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் இறந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடநாடு பங்களாவில் மரவேலைகள் செய்த அதிமுக பிரமுகர் சஜீவனிடம் விசாரணை நடைபெற்றது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பினர் கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் பேசிவருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மகன் செந்தில் குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
முந்தைய திமுக, அதிமுக ஆட்சி காலங்களில் மணல் ஒப்பந்தம் எடுத்துச் செல்வச் செழிப்போடு வலம் வந்தவர் ஆறுமுகசாமி. இவரது மகன் செந்தில்குமார் பெயரில் ‘செந்தில் குழுமம்’ என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். கோடநாடு பங்களாவில் இவர் கட்டுமான வேலைகளைச் செய்துள்ளார். தற்போது கோடநாடு கொலை வழக்கில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமியின் மகன் செந்தில் குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சசிகலா, விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கெனவே தனிப்படையினர் விசாரணை நடத்தியிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in