எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ரூ.1.10 கோடி நஷ்டஈடு வேண்டும்... என்னைப்பற்றி தனபால் பேச தடை விதிக்கணும்! எடப்பாடி பழனிசாமி வழக்கு

Published on

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

கனகராஜின் சகோதரர் தனபால்
கனகராஜின் சகோதரர் தனபால்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்த நிலையில், வழக்கு தொடர்பான விவரங்கள் தெரிந்திருந்தும், அவற்றை மறைத்ததாக கூறி கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இதனிடையே கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்.

அந்த மனுவில், ரூ.1 கோடியே 10 லட்சம் மான நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த மனு வரும் 19ம் தேதி நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வருகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in