சசிகலாவிற்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் விசாரணை: விறுவிறுப்பில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

சசிகலாவிற்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் விசாரணை: விறுவிறுப்பில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் செந்தில் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் கடந்த சில மாதங்களாகவே தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய நபர்களிடமும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிஐடி நகரில் உள்ள சைலி அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களில் கோடநாடு தொடர்பான சில ஆவணங்களும் சிக்கின. அந்த ஆவணங்களைக் கோவை ஐஜி சரக அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் கொடுத்ததன் அடிப்படையில் மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி மற்றும் அவரது மகன் அசோக்பாபு, நமது அம்மா முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் உள்ளிட்டோரிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சசிகலாவின் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த செந்தில் என்ற வழக்கறிஞரிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள அலுவலகத்தில் தனிப்படையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சுமார் 250 பேருக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in