கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!
Updated on
1 min read

கோடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. அதற்கு உரிய விசாரணை செய்து விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அப்போது அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " பொது சிவில் சட்டம் குறித்து முதல்வர் கடிதம் எழுதி இருப்பது அவருடைய கொள்கை. பொது சிவில் சட்டம் நாட்டுக்குத் தேவையா தேவையில்லையா என்பதை சட்ட வழக்கறிஞர் குழுவிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். வந்தவுடன் விரிவான அறிக்கை தரப்படும்.

16 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக இருந்து ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாட்டு மக்களுக்கு தந்த ஜெயலலிதாவின் இடமாகிய கோடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. அதற்கு உரிய விசாரணை செய்து விரைவாக குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை.

ஒரு நாட்டின் முன்னாள் முதல்வருக்கு இந்த நிலை என்பது மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள். உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள்.

தென்காசி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று ஜெயக்குமார், ஈபிஎஸ் கூறியது அவர்களுடைய உண்மையான அடிமனதில் இருக்கின்ற குணம் என்னவாக இருக்கிறது என்பதை கட்சியினுடைய தொண்டர்களும், மக்களும் புரிந்து இருக்கிறார்கள்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in