கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திடீர் அறிவிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திடீர் அறிவிப்பு

தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கோடநாடு கொலை, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு திடீரென உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் ஜெயலலிதவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதில் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கின் புதிய திருப்பமாக தனிப்படை போலீஸார் விசாரணை நடைபெற்றது. அப்போது, கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவர்கள் இருவரும் குற்றவாளிகளாக சேர்க்கபட்டனர். வழக்கு விசாரணை கோடநாடு மேலாளர் நடராஜன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் என இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோடநாடு கொலை, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in