செய்தியாளர்களை கலாய்த்த கே.என்.நேரு: விழுந்து விழுந்து சிரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

செய்தியாளர்களை கலாய்த்த கே.என்.நேரு: விழுந்து விழுந்து சிரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிக்கொண்டிருக்கும்பாேது செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டு திசை திருப்பியதால், அமைச்சர் கே.என்.நேரு குறுக்கிட்டு கலாய்த்தார். இதனால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதல் அங்கிருந்தவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நோய்களும் பரவ தொடங்கிவிட்டது. இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னையில் இன்று 200 வார்டுகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவ முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், கே.என்.நேரு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், சென்னையில் இன்று 200 வார்டுகளில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும். சென்னை மட்டுமின்றி பிற இடங்களிலும் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் கூறிக்கொண்டு இருந்தபோதே, குறுக்கிட்ட அமைச்சர் கே.என்.நேரு, நோக்கத்தை வேறு பக்கம் திருப்பாதீர்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "மழைக்காக மருத்துவ முகாம் போடப்பட்டு இருக்கிறது. மக்களுக்கு அமைச்சர் விவரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதை திசை திருப்பாமல் மழை சம்மந்தப்பட்ட கேள்வி கேளுங்கள். அதோடு என்னிடம் வாருங்கள்" என்று அமைச்சர் கூறியபோது மா.சுப்பிரமணியன் உள்பட அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அந்த நேரத்தில் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் கே.என்.நேரு, முதலில் என்னை பேச விடுங்க சார். என்னை பேச விடாமல் நீங்களாக பேசினால் எப்படி?" என்று கேட்டவுடன், உடனே அமைச்சர் மா சுப்பிரமணியம் குறுக்கிட்டு முதலில் அவர் பேசட்டும். தொடக்கத்தை அவர் ஆரம்பிக்கட்டும் என்றார். அதன் பிறகு மழை குறித்த தகவல்களையும், பாதிப்புகளையும், வடிகால்வாய் பணிகள் குறித்தும் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். இதன் பின்னர் அவர் பேசிய பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in