‘கடை வாடகையை நம்பியே நகராட்சிகள் உள்ளன’ - அதிர்ச்சியைக் கிளப்பிய அமைச்சர் கே.என்.நேரு

‘கடை வாடகையை நம்பியே நகராட்சிகள் உள்ளன’ - அதிர்ச்சியைக் கிளப்பிய அமைச்சர் கே.என்.நேரு

கரோனா காலகட்டத்தில் நகராட்சி கடைகள் வாடகை கட்டாததற்கு விலக்கு அளிக்கப்படாது. கடைகளின் வாடகையை நம்பிதான் நகராட்சிகள் உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப் பணிகள் ஆலோசனை செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வந்திருந்தார். அப்போது, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள், விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டிற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதன் கீழ் நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை அறிக்கை வரப்பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா காலகட்டத்தில் நகராட்சி கடைகள் வாடகை கட்டாததற்கு விலக்கு அளிக்கப்படாது. கடைகளின் வாடகையை நம்பிதான் நகராட்சிகள் உள்ளது.” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in