அதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தல்: ஆந்திராவில் விட்டுச்சென்ற கும்பல்: போலீஸ் சந்தேகம்

அதிமுக பெண் கவுன்சிலர் வீட்டில் போலீஸ் விசாரணை
அதிமுக பெண் கவுன்சிலர் வீட்டில் போலீஸ் விசாரணைஅதிமுக பெண் கவுன்சிலர் மகனுடன் கடத்தல்: ஆந்திராவில் விட்டுச்சென்ற கும்பல்: போலீஸ் சந்தேகம்

கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகன் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரோஜா மற்றும் அவரது மகனை காணவில்லை என்றும் வீட்டிலிருந்த சிவிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதனிடையே ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் கவுன்சிலர் ரோஜாவையும், அவரது மகனையும் கடத்தல் கும்பல் விட்டுவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் வீடு திரும்பி இருக்கின்றனர். இதில் சந்தேகம் தெரிவித்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் மர்ம கும்பலால் விடுவிக்கப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in