கலைஞருடன் இருக்கும் போட்டோ ; ஆசிரியர் தினத்தில் பரபரப்பை கிளப்பிய குஷ்பு!

கருணாநிதியுடன் குஷ்பு
கருணாநிதியுடன் குஷ்பு

இன்று செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் என்பதால் அனைவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்பு திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பரபரப்பைக் கூட்டியுள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுகள் அகில இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் என அனைவரும் திமுகவையும், உதயநிதியையும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘’ என்னுடைய அரசியல் பள்ளியின் முதல் நாள். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியருடன்... நினைவுகளை அசைப்போடுகிறேன்’’ என பதிவிட்டு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in