மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸின் முகம் அல்ல முகமூடி: பாஜக எம்.பி காட்டம்

மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸின் முகம் அல்ல முகமூடி: பாஜக எம்.பி காட்டம்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அக்கட்சியின் முகம் அல்ல முகமூடி என்று பாஜக எம்.பி சுதான்ஷு திரிவேதி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் உண்மையான தலைவர் காந்தி குடும்பம் என்றும் அவர் கூறினார்.

தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்யசபா எம்.பி சுதான்ஷு திரிவேதி, "மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், ஆனால் உண்மையான தலைவர் காந்தி குடும்பம் என்று சல்மான் குர்ஷித்தும் கூறியுள்ளார். எனவே, கார்கே ஜி என்பவர் கட்சியின் முகம் அல்ல முகமூடி. எனவே காங்கிரஸ் அதன் தலைவர்களை ஏமாற்றுகிறது என்பது தெளிவாகிறது" என்று கூறினார்.

மேலும், “ பாரத் ஜோடோ யாத்திரையின் போது நாடு முழுவதும் தனது பேச்சுக்களின் மூலம் இந்துக்களின் வாக்குகளைப் பெற காங்கிரஸ் இப்போது முயற்சிக்கிறது. பின்னர் இந்துக்கள் தலிபான்களாகவும், பாகிஸ்தானாகவும் மாறுகிறார்கள். காங்கிரஸுக்கு பயங்கரவாதிகளாக மாறுகிறார்கள்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in