
களமச்சேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள களமச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜெகோவா விட்னெஸ் என்ற மத வழிபாட்டு மையத்தில் 3 வெடிகுண்டுகள் வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சரணடைந்த ஒருவரிடம் கேரள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியதோடு, கேரள அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதற்கு முதலமைச்சர் பினராயி விஜயனும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இதனிடையே சமூக வலைதளங்களில் ராஜீவ் சந்திரசேகரின் பதிவுகள், இரு தரப்பினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கொச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதன் பேரில் கொச்சி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... திமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை!
பகீர்... 81 கோடி இந்தியர்களின் ஆதார் தரவுகள் விற்பனை... சிபிஐ விசாரணை!
இன்றே கடைசி தேதி... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மைதானத்தில் வீராங்கனைக்கு முத்தமிட்ட விவகாரம்... லூயிஸுக்கு 3 ஆண்டுகள் தடை!