பினராயி விஜயனுக்கு `திராவிட மாடல்' புத்தகத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

பினராயி விஜயனுக்கு `திராவிட மாடல்' புத்தகத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். அப்போது, திராவிட மாடல் என்ற புத்தகத்தை பினராயி விஜயனுக்கு முதல்வர் வழங்கினார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் தென்மண்டல கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். கூட்டம் நடைபெறுவதையொட்டி கேரள அரசின் சார்பில் இன்று நடைபெற்ற கலை, இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

இதனிடையே, கோவளத்தில் இருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். அப்போது, திராவிட மாடல் என்ற புத்தகத்தை பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கி பொன்னாடை அணிவித்தார். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை காலை தொடங்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்து வைக்கிறார். இதன் பின்னர் கூட்டம் முடிந்ததும் நாளை இரவு 7 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in