பினராயி விஜயன் பிரச்சாரத்தையும் தாண்டி இடைத்தேர்தலில் வென்ற காங்கிரஸ்!

உமா தாமஸ்
உமா தாமஸ்

கேரள மாநிலத்தின் திருகாக்கரை தொகுதி எம்எல்ஏவும், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான பி.டி.தாமஸ் (70) அண்மையில் காலமானார். இதையடுத்து திருக்காக்கரை தொகுதிக்கு இடைத்தேர்தல் மே 31-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது காங்கிரஸ்.

மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப்
மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப்

இந்தத் தேர்தலில் எப்படியும் மீண்டும் வெல்ல வேண்டும் என்பதால் தாமஸின் மனைவி உமா தாமஸைக் காங்கிரஸ் கட்சி களம் இறக்கியது. மார்க்சிஸ்ட் சார்பில் ஜோ ஜோசப் போட்டியிட்டார். மருத்துவரான ஜோ ஜோசப்பிற்கு ஆதரவாக, கேரள முதல்வர் பினராயி விஜயனும் தேர்தல் பரப்புரை செய்தார். முதல்வரின் பிரச்சாரத்தையும் தாண்டி காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் உமா தாமஸ் 72,770 வாக்குகளும், மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோ ஜோசப் 47,754 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன் 12,957 வாக்குகளும் பெற்றுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் உமா தாமஸ், 25,016 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in