பிரபல நடிகருக்கு காவல்துறை சம்மன்... பெண் பத்திரிக்கையாளர் புகாரால் புதிய சிக்கல்

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

பிரபல மலையாள நடிகரும், பாஜக முன்னாள் எம்பியுமான சுரேஷ் கோபி, பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் புகாரை அடுத்து காவல்துறை விசாரணைக்காக சம்மன் விடுக்கப்பட்டுள்ளார்.

மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி. இவர் தமிழ் உட்பட பல்வேறு தென்னிந்திய மொழிகளிலும் நடித்ததில் பிரபலமானவர். பாஜகவில் சேர்ந்து அதன் மாநிலங்களவை உறுப்பினராகவும் சுரேஷ் கோபி இருந்திருக்கிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ’கருடா’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

சினிமா, அரசியல் என கேரளாவின் பிரபலமாக வளையவரும் சுரேஷ் கோபி அண்மையில் பொதுவெளியில் நடந்துகொண்ட விதம் விமர்சனத்துக்கு ஆளானது. கோழிக்கோடு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றின்போது, பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் தோளில் அவரது அனுமதி இன்றி சுரேஷ் கோபி கைவைத்தது சர்ச்சையை கிளப்பியது.

அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதும், பத்திரிக்கையாளர் மீது கைவைத்தது பாசத்துடன் நேரிட்ட நிகழ்வு என்று சுரேஷ்கோபி அதனை உதாசீனம் செய்ய முயன்றார். பின்னர் அந்த நிகழ்வுக்கு வருத்தமும் தெரிவித்தார். ஆனால் பெண் பத்திரிக்கையாளரின் அனுமதி இன்றி, ஒன்றுக்கும் மேலான முறைகள் அவ்வாறு சுரேஷ் கோபி நடந்து கொண்ட விதம், அவருக்கு எதிரான விமர்சனங்களை அதிகரிக்கச் செய்தது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுரேஷ் கோபி
பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுரேஷ் கோபி

இதன் தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளர் காவல்துறையில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் மற்றும் அரசியல்வாதியான சுரேஷ் கோபிக்கு கேரள போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். பெண் பத்திரிக்கையாளர் அளித்த புகார் தொடர்பான விசாரணையில் பங்கேற்க நவ.18க்குள் நேரில் வருமாறு, சுரேஷ் கோபிக்கான சம்மனில் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in