‘கேஜ்ரிவால் கைதால் அனுதாப ஓட்டுகள் கிடைக்கும்’ பாஜகவை சீண்டும் ஆம் ஆத்மி

அரவிந்த் கேஜ்ரிவால் - ஆம் ஆத்மி
அரவிந்த் கேஜ்ரிவால் - ஆம் ஆத்மி

‘அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, ஆம் ஆத்மி கட்சி ஆதாயமளிக்கும் வகையில் அனுதாப வாக்குகளை அள்ளித்தரும்’ என அக்கட்சியின் மூத்த தலைவரான அதிஷி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவை புது வேகம் பெற்றுள்ளன. டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்தது முதல், கேரள முதல்வரின் மகளுக்கு சம்மன் அனுப்புவது வரை அமலாக்கத்துறை தேசம் நெடுக சுறுசுறுப்பு காட்டி வருகிறது. குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது, பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணியின் தேர்தல் கள வீச்சைக் குறைக்கும் எனவும் அனுமானிக்கப்படுகிறது.

ஆம் ஆத்மி போராட்டத்தில் அதிஷி
ஆம் ஆத்மி போராட்டத்தில் அதிஷி

வட இந்தியாவைப் பொறுத்தளவில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு என தனி ஆதரவு வட்டம் உண்டு. ஊழலுக்கு எதிரான போராட்டம் முதல் அரசியல் கட்சியாக பரிமாணம் எடுத்தது வரை அரவிந்த் கேஜ்ரிவால் வட இந்திய மக்கள் மத்தியில் தனி கவனம் ஈர்த்து வருகிறார். பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது தரப்பை எதிர்பார்த்த வாக்காளர்களுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை அளித்தார். டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்ததோடு, பாஜக வாக்குவங்கியை அதிகம் கொண்ட குஜராத், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் தனக்கான ஆதரவு தளத்தை கேஜ்ரிவால்அதிகரித்து வருகிறார்.

இவை பாஜகவை நேரிடையாக சீண்டும் வகையில் அமைந்தன. குறிப்பாக குஜராத்தில் பெற்ற கணிசமான வெற்றி, ஆம் ஆத்மியை தேசிய கட்சியாக அடுத்தக் கட்டத்துக்கு அழைத்துச் சென்றன. இவற்றின் மத்தியில் ஆம் ஆத்மி வளர்ச்சிக்கு வேகத்தடையிடும் வகையில் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு அமலாக்கத்துறை கையில் சிக்கியது. அமலாக்கத்துறை சம்மன்களை சட்டை செய்யாது இழுத்தடித்த அரவிந்த் கேஜ்ரிவாலை கோர்ட் தலையீடு வாயிலாக அமலாக்கத்துறை மார்ச் 21 அன்று கைது செய்தது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது தேசிய அரசியல் களத்தில் பாஜகவுக்கு ஆதரவான நகர்வாக பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்களில், பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாட தயாராகி வந்த அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் முடங்குவது, பாஜகவுக்கு எதிரான வட இந்திய தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த கணிப்புக்கு மாறாக அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது ஆம் ஆத்மிக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் மாறப் போகிறது என்கிறார் ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் டெல்லி நிதியமைச்சருமான அதிஷி.

அரவிந்த் கேஜ்ரிவால்
அரவிந்த் கேஜ்ரிவால்

கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதற்கு எதிராக ஆம் ஆத்மி மட்டுமன்றி இண்டியா கூட்டணி சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே ஜெர்மனி, அமெரிக்க போன்ற நாடுகளும் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது, பாஜகவை அதிரச் செய்திருக்கிறது. இந்த வரிசையில் ”கேஜ்ரிவால் கைது என்பது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வு; ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட பெரும் தாக்குதல்’ என்றும் அதிஷி வர்ணித்துள்ளார்.

கூடவே, “கேஜ்ரிவால் கைது காரணமாக பொதுமக்கள் மத்தியில் அவருக்கும் அவரது கட்சியான ஆம் ஆதிமிக்கும் அனுதாபம் சேர்ந்துள்ளது. இந்த அனுதாப அலை எங்களுக்கு வரும் தேர்தலிலும் பலனளிக்கும்” என்றும் அதிஷி கூறியுள்ளார். முன்னதாக ’இந்தியா கூட்டணி - பாஜக’ அல்லது ’ஆம் ஆத்மி - பாஜக’ என்பதாக இருந்த அரசியல் போட்டி நிலைமை மாறி தற்போது ’மக்கள் - பாஜக’ என்பதாக மாறியுள்ளது” என்றும் அதிஷி விமர்சித்துள்ளார்.

இவரது வாக்குப்படி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அனுதாப வாக்குகள் சேருமெனில், அது பாஜகவுக்கு வரும் தேர்தலில் சேதாரம் சேர்க்கக்கூடும்.

இதையும் வாசிக்கலாமே...  


ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in