முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை எப்படி இருக்கிறது?- காவேரி மருத்துவமனை அறிக்கை

முதல்வர் ஸ்டாலினின் உடல் நிலை எப்படி இருக்கிறது?- காவேரி மருத்துவமனை அறிக்கை

கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் பணிகளை ஆய்வு செய்தார். அன்று உடல் சோர்வுடன் காணப்பட்ட முதல்வருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக ட்விட்டரில் பதிவு செய்தார். முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் பெற வேண்டி பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவப் பரிசோதனை முடிந்து முதல்வர் இன்று அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வரின் உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து குணமடைந்து வருகிறார். மேலும் சில நாட்கள் அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in