கச்சத்தீவு மீட்பு விவகாரத்தில் தலையிட முடியாது! உயர்நீதிமன்றம்

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

கச்சத்தீவினை இலங்கையிடம் இருந்து மீட்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

கச்சத்தீவு
கச்சத்தீவு

சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்திய சுதந்திரத்திற்கு பின் கச்சத்தீவு ராமேஸ்வரத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையிலான ஒப்பந்தபடி இலங்கைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. அப்போதைய ஒப்பந்தத்தில் இரு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவு பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 83-ம் ஆண்டு முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படை பிடித்து சென்ற 22 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதுடன் கச்சத்தீவை மீட்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கச்சத்தீவு மீட்பு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கினை முடித்து வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in