கச்சத்தீவு விவகாரம் ஒரு வரலாற்று பிழை; திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது?... டிடிவி.தினகரன் கேள்வி!

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
Updated on
2 min read

கச்சத்தீவை தாரை வார்த்தது வரலாற்றுப் பிழை எனவும், அதைச் சொன்னால் திமுகவிற்கு ஏன் கோபம் வருகிறது எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் கிராமத்தில், ஆங்கிலேயரின் கைரேகை சட்டத்திற்கு எதிராக போராடி உயிர்நீத்த மாயக்காள் என்ற பெண் உள்பட 16 வீரத்தியாகிகளின் நினைவிடம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 3ம் தேதி அவர்களது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை என்றழைக்கப்படும் வீரத்தியாகிகள் தினம் அரசு விழாவாக கொண்டாடப்படுகின்றது.

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை
பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை

இந்நிலையில் அமமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெள்ளையர்களுக்கு எதிராக போராடி உயிர்நீத்த வீரத்தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர வேண்டும். கடந்த 2000ம் ஆண்டிற்கு பின் இங்கே அஞ்சலி செலுத்த வந்துள்ளதை நினைத்து பெருமைப்படுகின்றேன்.” என்றார்.

பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை
பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை

அருணாசலப் பிரேசத்திற்கு சீனா பெயர் வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே எனக் கேட்டதற்கு, ”பெயர் வைப்பதால் அவர்களுக்கு சொந்தம் ஆகாது. இவர்களாக பெயர் வைத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. பெருங்காமநல்லூருக்கு என்னுடைய பெயர் வைத்தால் ஏற்றுக்கொள்ள முடியுமா?. இந்தத் தேர்தலில் கச்சத்தீவு பற்றிய பிரச்சினையே பிரதானமாக உள்ளது. தினமும் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் இலங்கை ராணுவமும், கடற்படையும் கைது செய்து வருகிறது. அதன்பின்னர் மத்திய அரசு இலங்கையுடன் பேசி விடுதலை செய்வதும் தொடர்ச்சியாகி உள்ளது.” என்றார்.

மேலும், ”கச்சத்தீவை தாரை வார்த்ததே இந்த விவகாரத்திற்கு காரணம். உண்மையை சொன்னால் திமுகவுக்கு ஏன் கோபம் வருகிறது?. 1974ல் காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அந்த திட்டத்துக்கு அப்ரூவல் கொடுத்தார். அது வரலாற்றுப் பிழை. கச்சத்தீவு கட்டாயம் மீட்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in