துபாயில் கடலில் நகரமே இருக்கு, மெரினாவில் பேனா வைக்கக்கூடாதா? - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிதுபாயில் உள்ள கடலில் நகரமே இருக்கு, மெரினாவில் பேனா வைக்கக் கூடாதா..? - அமைச்சர் பொன்முடி

’’மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை, தமிழகத்திலும் வள்ளுவர் சிலை பாம்பன் பாலம் ஆகியவை கடலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. துபாயில் கடலில் ஒரு நகரம் மற்றும் ஹோட்டல் இருக்கிறது. அது எல்லாம் இருக்கிறபோது கலைஞரின் பேனா சிலை அமைப்பதில் என்ன தவறு இருக்கிறது’’ என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ‘’ ஊடகவியலாளர்களுக்கு என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. பேனா சிலை அமைப்பதற்கான ஏற்படுகளை முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

மகாராஷ்டிராவில் சிவாஜி சிலை வைத்திருக்கிறார்கள். அது ஒன்றும் புதிது அல்ல. நமது தமிழகத்திலும் வள்ளுவர் சிலை, பாம்பன் பாலம் ஆகியவை கடலில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. துபாயில் கடலில் ஒரு நகரம் மற்றும் ஹோட்டல் இருக்கிறது. அது எல்லாம் இருக்கிறபோது கலைஞரின் பேனா சிலை அமைப்பது தொடர்பாக அரசியலுக்காக பேசி வருகின்றனர்.

கலைஞரின் பேனா என்பது வரலாற்றை மாற்றி அமைத்த பேனா என்ற முறையில், அந்த வரலாற்றை தமிழக இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in