`சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா?'- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு`சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா?'- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்

சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் ராஜகோபுரம், சுற்றுப்பிராகாரம், கருங்கல் பதிக்கும் பணிகள், மின் பணிகள் நந்தவனம் சீரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’இந்த கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள்ளாக முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும். தங்கத்தேருக்கான பணிகள் ஆறு கோடி செலவில் செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் தான் உபயதாரர்கள் மனமுவந்து தரும் தொகை முழுமையாக திருக்கோயிலுக்கு செய்யப்படும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துள்ளது.

முருகன் கோயிலில் தைப்பூசம் திருவிழா சிறப்பாக நடைபெற ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்திற்குள் 444 திருக்கோயில் குடமுழுக்கு நடத்தியுள்ளோம். 

கலைஞரின் நினைவாக மெரினா கடலில் பேனா சின்னம் அமைக்கப்பட்டால் உடைப்பேன் என சீமான் பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தில் ஆவேசப்பட்டுள்ளார். எங்கள் கைகள் அதுவரை பூப்பறிக்குமா? . சீமானுக்கு மட்டும் தான் கைகள் உள்ளதா? எங்களுக்கு கைகள் இல்லையா? ’’ என ஆவேசத்துடன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in