ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அழைப்பு

ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அழைப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை இந்த ஆண்டு சிறப்பாகக் கொண்டாட திமுக தலைமை முடிவு செய்துள்ளது. ஸ்டாலின் முதல்வரான நேரத்தில் கரோனா காரணமாகக் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவைக் கோலாகலமாகக் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது. அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கரோனா தளர்வுகள் காரணமாகப் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதையொட்டி கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. மே 28-ம் தேதி சனிக்கிழமை காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் கூட்டம் 28.05.2022 அன்று காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்’ நடைபெறும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in